ஆசிய கிண்ணப் போட்டி தொடரில் பங்கேற்காத விராட் கோஹ்லி!!

ஆசிய கிண்ணப் போட்டி தொடருக்கான இந்திய அணியில் விராட் கோஹ்லி இடம்பெற மாட்டார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு முதல் ஆசிய கிரிக்கெட் அணிகள் மட்டுமே மோதும் ஆசிய கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடர்களில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், வரும் 15ஆம் திகதி 14வது ஆசிய கிண்ண தொடர் ஐக்கிய எமிரேட்ஸில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி என மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற விராட் கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், விக்கெட் கீப்பராக டோனி களம் காணுவார். அத்துடன் ரோஹித் ஷர்மா அணித்தலைவராகவும், ‘யோ யோ’ தேர்வில் வெற்றி பெறாததால் இங்கிலாந்து தொடரில் இடம் பிடிக்காத அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

பந்துவீச்சில் பும்ரா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி