முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு!!

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதாக கூறி, தான் பிரதம நீதியரசர் பியசாத் டெப் பிடம் முறைப்பாட்டை செய்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடை, மாதிவல பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட போது, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் ஜனாதிபதி சார்பில் அங்கு ஆஜராகி இருந்ததாக கூறப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய பிரதம நீதியரசராக பதவி வகித்த ஒருவர், சட்டத்தரணியாக செயற்பட முடியாது.

இதனடிப்படையிலேயே பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி