கூட்டு எதிர்க்கட்சி போராட்டத்துக்கு பஸ்களை வழங்கத் தயார்:அரசாங்கம் !

கூட்டு எதிர்க்கட்சி நாளை கொழும்பில் நடத்தவுள்ள எதிரிப்பு பேரணிக்கு மக்களை அழைத்து வருதற்கு பஸ்களை வழங்கத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.மேலும், முறையாக கோரினால் வழங்கவும் தயாராக இருக்கின்றோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி நாளை கொழும்பில் நடத்தவுள்ள எதிர்ப்பு பேரணிக்கு மக்களை அழைத்து வருவதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதாக கூட்டு எதிரணியினர் தெரிவித்து வருவது தொடர்பாக வினவியபோது போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க இதனைத் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி நாளை கொழும்பில் நடத்தவுள்ள எதிர்ப்பு போராட்டத்துக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எந்தவொரு பஸ்ஸையும் பெற்றுக்கொள்ளவில்லை.

பஸ்களை பெற்றுக்கொள்வதற்காக பின்பற்றப்படும் விதிமுறைக்கமைய கட்டணம் செலுத்தி போக்குவரத்து சபைக்கு சொந்தமான எந்தவொரு பஸ்ஸையும் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி