இலங்கையில் அதிகரிக்கும் ரயில் விபத்துகள்! அச்சத்தில் ரயில் பயணிகள்

நாட்டில் இதுவரை காலமும் இல்லாதளவு ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான ​தேசிய சபைத் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்துக்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ரயிலில் மோதி 241 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆகையால் ரயில் விபத்துக்களை தடுப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதுடன் நவீன முறைகளையும் கையாள திட்டமிட்டுள்ளோம்.

இதேவேளை ரயிலில் மோதுண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” எனவும் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி