ஓரிருவருக்காவது மரண தண்டனையை நிறைவேற்றிய பின்னரே பதவியில் இருந்து விலகுவேன்!

நான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் ஓரிருவருக்காவது மரண தண்டனையை நிறைவேற்றி விட்டே செல்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

40, 50 வருட காலமாக பேச்சளவில் மட்டுமே இருந்துவரும் கணக்காய்வு சேவையை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.

ஊழல், வீண்விரயம் மற்றும் திருட்டுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் இருந்துவரும் காலதாமதம் தொடர்பாக நாட்டு மக்களின் கவலை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக தான் நியமித்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்தி தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதன்போது மக்களின் சொத்துக்களையும் அரச நிதியையும் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தில் மரண தண்டனையையும் உட்படுத்த வேண்டும்.

அதற்கான சட்டத்தை உருவாக்க வேண்டும் என பிரதமர், சபாநாயகர் மற்றும் அனைத்து கட்சிகளிடமும் வேண்டுகின்றேன்.

அதற்கு வழிசமைத்துக் கொடுப்பீர்களாயின் நான் ஜனாதிபதி பதவியில் இருந்து செல்வதற்கு முன் ஒரு சிலருக்காவது மரண தண்டனையை நிறைவேற்றி விட்டே செல்வேன்.

கடுமையான சட்டங்கள் நாட்டில் இல்லாத காரணத்தில்தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி