மதுபோதையில் விவாதத்தில் ஈடுபட்ட நபரில் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம் !

பொலன்னறுவை மாவட்டத்தில் திம்புலாகல- நவமில்லான பிரதேசத்தில் நேற்றிரவு நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.31 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே மண்வெட்டி பிடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அரணகங்வில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை தொடர்பாக சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளதாகவும் அரணகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் குடித்துக் கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதுவே இந்த கொலைக்கு காரணமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரணகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி