எரிபொருள் விலை குறித்த நிதி அமைச்சரின் முக்கிய அறிவித்தல்!!

எரிபொருள் விலைச் சூத்திரம் எதிர்வரும் 10ஆம் திகதி வருவதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகளவு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பா மசகு எண்ணெய் 80 டொலர் வரை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டிலும் இருக்கும்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்தால் ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை 100 டொலரையும் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி