பொன்சேகாவின் 'பீல்ட் மார்ஷல்' பட்டத்தைப் பறிப்பதற்கு அரச தரப்பில் பேச்சுகள்!!

அமைச்சரும், பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகாவிடமிருந்து 'பீல்ட் மார்ஷல்' பட்டத்தைப் பறிப்பதற்கு அரச தரப்பில் பேச்சுகள் இடம்பெற்றுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக சரத் பொன்சேகா பாதுகாப்புத் தரப்புப் பற்றியும், இராணுவத் தளபதி குறித்தும் முன்வைக்கும் விமர்சனங்களால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே அரச தரப்பில் பொன்சேகாவுக்கு எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளன.

பீல்ட் மார்ஷல் பட்டத்தை பொன்சேகாவிடமிருந்து பறிக்க வேண்டுமென்றால் ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிக்கையொன்று வெளியிட வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஆலோசகர்களிடம் ஆலோசனை கோரியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி