அபிராமியின் கணவரிடம் நடிகர் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? உருக்கமாக பேசிய விஜய் !

சென்னை குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் கள்ளக்காதலன் சுந்தரத்திற்காக தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் இரக்கமின்றி கொலை செய்தார். அதுமட்டுமின்றி கணவரான விஜயை கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டியிருந்தார்.

அந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கணவரான விஜய்க்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று விஜயை வரவழைத்து நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரஜினி, மீண்டு வாருங்கள் விஜய், ஆண்டவன் எப்போதும் துணை இருப்பான்.

நாங்கள் இருக்கிறோம் என்று கண்கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார். ரஜினியின் பேச்சைக் கேட்டவுடன், விஜயும் தன்னுடைய கஷ்டங்களை கூறி அழுதுள்ளார்.

அதன் பின் ரஜினி சந்திப்பு குறித்து விஜய் கூறுகையில், நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதேபோல என்னுடைய குழந்தைகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே பேசும், சைகைகளைச் செய்து காட்டுவார்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி