மஹிந்தவின் மக்கள் சக்தி போராட்டம்!! நிலை குலையும் கொழும்பு!!!

எதிர்வரும் 5ம் திகதி மக்கள் கொழும்பு வருவதனை தடுத்து நிறுத்த அரசாங்கத்தினால் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் சக்தி போராட்டத்தில் பங்கேற்கும் மக்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் எவ்வாறான சட்டங்களை அமுல்படுத்தினாலும் அது பலனளிக்காது என மஹிந்த கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

பஸ்களில் விசேட பயணங்களை மேற்கொள்வதனை தடுப்பது நகைப்பிற்குரியது, இவ்வாறான செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தை மேலும் இழிவுபடுத்தும்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் சக்தி போராட்டத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

மக்கள் சக்தி போராட்டத்தில் பாரியளவில் மக்கள் பங்கேற்பார்கள் என்பதனை புரிந்து கொண்ட அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு அஞ்சப் போவதில்லை என பகிரங்கமாக கூறி வரும் அரசாங்கம் மனதிற்குள் பீதியடைந்துள்ளது.

பஸ்கள் விசேட பயணங்களை மேற்கொள்வதனை அரசாங்கம் தடுத்தாலும் மக்கள் நடந்தேனும் 5ம் திகதி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி