பகல் கனவு காணும் கூட்டு எதிர்க்கட்சியினர் - மகிந்த அமரவீர

மக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தி, கொழும்பை முற்றுகையிட்டு அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்று கூட்டு எதிர்க்கட்சியினர் பகல் கனவு காண்பதாகஅமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் பொது மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவது எனவும் அந்த ஆர்ப்பாட்டத்தை அடக்க அரசாங்கத்திற்கு எந்த தேவையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது ஜனநாயகம் கரைபுரண்டோடுகிறது என்பதால், ஆர்ப்பாட்டங்களை நடத்த சுதந்திரம் இருக்கின்றது.

பொது ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை அடக்கும் எந்த தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி