நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத் திருவிழா!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று தீர்த்தத் திருவிழா நடைபெற்றுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த மாதம் 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஆலயத்தில் இடம்பெற்று வந்த நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில் இன்றைய தினம் நடைபெற்ற தீர்த்தத்திருவிழாவிலும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி