மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி வெறும் நாடகமே - விஜித ஹேரத்

கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்த மக்கள் சக்தி கொழும்புக்கு என்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்துள்ளதாக அதனை ஒழுங்கு செய்தவர்களே கூறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக எவரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த முடியும். எனினும் கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று நடத்தியது மக்கள் சக்தி என்ற நாடகம்.

அதேபோல் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. 6 மாதங்களுக்குள் அரசாங்கம் இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி