மகிந்த மைத்திரியை மீண்டும் இணைக்க முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் வெற்றியில்!!

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரை மீண்டும் இணைப்பது ஆகிய இரண்டு விடயங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரை ஒன்றிணைக்க மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தேவையான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பது மற்றும் இந்நாள் , முன்னாள் ஜனாதிபதிகளை இணைப்பது ஆகியவற்றை ஒரே நேரத்தில் மேற்கொள்ள உள்ளதாகவும் இது சம்பந்தமாக விரைவில் மைத்திரி மற்றும் மகிந்தவை சந்திக்க எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 23 பேரிடம் இது சம்பந்தமாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை ஓரளவுக்கு வெற்றியளித்துள்ளதாகவும் இவர்களின் பெரும்பாலானவர்கள் முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாகவும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி