கணவர் மரணம்; இளம்பெண்ணுக்கு மாமனாரால் காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவின் ஒடிசாவில் மருமகளை மாமனார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகராம் என்பவரின் மனைவி ருக்மணி. கடந்த மாதம் சுகராம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து தனது கணவர் வீட்டிலேயே ருக்மணி வசித்து வந்தார். இந்நிலையில் ருக்மணிக்கு தனது மாமனார் ரோகிதாஸுடன் நேற்று தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரோகிதாஸ், ருக்மணி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினார்.

இதையடுத்து வலியால் துடித்த ருக்மணி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தலைமறைமாக உள்ள ரோகிதாஸை பொலிசார் தேடி வருகிறார்கள்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி