சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இரா.சம்பந்தனிற்குமிடையிலான சந்திப்பு!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், எனக்கும் இடையில் எதிர்வரும் 7ஆம் திகதி சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஊடகங்களைப் பார்த்துத்தான் நான் அறிந்துகொண்டேன்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார்.

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்னைச் சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளார். சந்திப்புக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

சந்திப்பு எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நான் ஊடகங்களைப் பார்த்துத்தான் அறிந்தேன். அவர் விரும்பும் நேரத்தில் என்னைச் சந்தித்துக் கொள்ளலாம்” என சம்பந்தன் மேலும் கூறினார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி