பிரித்தானியாவில் பொலித்தீன் குறித்து நடைமுறைப்படுத்தவுள்ள திட்டம்!!

பிரித்தானியாவில் பொலித்தீன் பைகளின் விலை 10 ஸ்டெர்லிங் பவுண்ட் ஆக அதிகரிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

கடந்த அக்டோபர் 2015-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தனிப் பைகளுக்கும் 5 பவுண்ட் ஸ்டெர்லிங் சொலுத்திவருகின்றனர்.

இத்திட்டம் 250-ற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கமர்த்தியுள்ள சில்லறை வியாபார நடவடிக்கைகள் வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது எந்தவொரு விற்பனையாளர்களும் இதைக் கடைப்பிடிக்க அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம் இதற்கான கட்டணமும் இருமடங்காக்கப்பட்டுள்ளது.

இந்நடைமுறை பிளாஸ்டிக் மாசுக்களைத் தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டு அரசினால் அறிமுகப்படுத்தப்படும் திட்டமாகும்.

இது தொடர்பான அறிக்கை இவ்வருட இறுதியில் வெளிவரும் எனத் தெரியவருகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி