ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!!

சைட்டம் மாணவர்களை இடம்மாற்றுவதற்கு அவர்களிடம் இருந்து நிதி கேட்டுள்ள நிலையில், அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் சைட்டம் மாணவர்களால் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைட்டம் மாணவர்களை இடம்மாற்றுவதற்கு அவர்களிடம் இருந்து சுமார் 13 இலட்சம் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது. இதை கட்டுவதற்கு எம்மில் பலருக்கு இயலாமல் உள்ளது.

ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு வரும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி