மனித உரிமைகளுக்காக போராடவே நான் அரசியலுக்கு வந்தேன் - மங்கள சமரவீர

கத்தோலிக்க திருச் சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சம்பந்தமாக தான் கூறி கருத்து தனது தனிப்பட்ட கருத்து எனவும், அந்த நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மனித உரிமைகளுக்காக போராடவே நான் அரசியலுக்கு வந்தேன்.

மனித உரிமை தேவையற்றது என எவராவது கூறுவார்கள் எனில் அதனை அருவருப்புடன் நிராகரிக்கின்றேன். கர்தினால் சார்பில் குரல் கொடுப்பவர்கள் போதைப் பொருள் விற்பனையாளர்கள். இது அவருக்கு செய்யும் அவமரியாதை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்து தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர தனது எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா வர்ணகுலசூரிய கருத்து வெளியிட்டிருந்தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி