சுமந்திரன் தலைமையில் யாழில் கூடிய கூட்டம்!!

யாழ்.மாவட்டத்தில் நாடாளுமன்ற நிதிக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இன்னும் 4500 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

அவ்வாறு கையளிக்கப்படவுள்ள காணிகள் எப்போது கையளிக்கப்படுமென்பதை உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுவதனால், தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந் நிதிக்குழுவின் கூட்டம் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில், நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் எம்.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்.மாவட்ட செயலக மேலதிக காணி அரசாங்க அதிபர் சு. முரளிதரன், மீள்குடியேற்றம் தொடர்பாகவும், நிதி ஒதுக்கீடு உட்பட உட்கட்டமைப்பு பற்றி கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரையில் யாழ்.மாவட்டத்திற்கு 1500 குடும்பங்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளன. இவர்களுக்கான தேவைகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தவர்கள் 80 ஆயிரம்பேர் இந்தியாவில் இருக்கின்றார்கள். பகுதி பகுதியாக வருகின்றார்கள். அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் இன்னும் 4500 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் பாவனையில் உள்ளன. தொடர்ந்து வரும் ஆண்டுகளில், இந்த காணிகள் விடுவிக்கப்படலாம்.

ஆனால், தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஒரே நேரத்தில் செய்துகொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், யாழ்.மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 2900 இருக்கின்றார்கள். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான தொழில் வாய்ப்பு வழங்குவதற்காக அவர்களுக்கான சம்பளத்தின் 50 வீதத்தினை ஒதுக்கி இருக்கின்ற போதிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான தொழில்களை வழங்க தொழில் நிறுவனங்கள் காணப்படவில்லை.

பாதுகாப்பு பிரச்சினை. இவ்வாறு இருக்கின்ற போது, தொழில் வழங்குவதற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

இருந்தும், 90 பேரைக் கண்டு பிடித்துள்ளோம். ஆனால், அவர்களுக்கான சரியான வேலை வாய்ப்பினை வழங்க முடியாதவர்களும் உள்ளனர்.

எனவே, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற மாற்று திட்டம் ஒன்றினை முன்வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதன்போது, மாற்று யோசனைகளை ஆராய்ந்து முன்வைக்குமாறு நிதிக்குழுவின் தலைவர் சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி