யாழில் ஹெராயினுடன் கைதான இருவர்!!

யாழில் ஹெராயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 282 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளன. 24 மற்றும் 27 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி