இலங்கை கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஐ.நா தூதுவர்!

இலங்கை கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஈடுபட்டுள்ளார்.

வத்தளை ப்ரிதிபுர கடற்கரையை அவர் சுத்தப்படுத்தி, பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளனார்.

கடலோர சுத்திகரிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Tung-Laï Margue இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து கடலோர சுத்திகரிப்பு வாரத்தினை முன்னெடுத்தனர்.

சர்வதேச ரீதியாக முக்கியமான பிரதிநிதி ஒருவர், இலங்கையை கடற்கரையை சுத்தப்படுத்தும் விடயம் நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த விடயம் சர்வதேச ரீதியாகவும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி