மக்களை கேடயங்களாக பயன்படுத்தி வரும் கூட்டு எதிர்க்கட்சி!!

எதிர்நோக்கி வரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிப்பதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் மக்களை கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியும் இப்படியான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியது. அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது.

எனினும் கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தும் இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு எந்த நோக்கங்களும் இல்லை.

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க அவர்கள் மக்களை கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மக்களை வழிநடத்தியது போல், கூட்டு எதிர்க்கட்சியினர் மக்களை வழிநடத்தி வருகின்றனர்.

இப்படியான ஆர்ப்பாட்ட பேரணிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி