மைத்திரியின் திடீர் முடிவு! பதற்றத்தில் கொழும்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கவுள்ள அதிரடி தீர்மானம் காரணமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் கடுமையான சில தீர்மானங்கள் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிய நிதி முறைக்கேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முக்கிய அமைச்சர்கள் சிலர் தொடர்பிலும் ஜனாதிபதி கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் சிலர் இதற்குள் உள்ளடங்குகின்றது.

இதுவரையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்கள் சிலவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி எவ்வாறான தீர்மானங்களை எடுக்கப் போகிறார் என்பது தொடர்பில் கொழும்பு அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி