பெண்ணொருவருக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்!

யாழ். நல்லூரில் மாற்றுத்திறனாளி பெண்ணொருவருக்கு நபரொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

நல்லூர் கந்தன் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்தில் கடை அமைப்பதற்கான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Search Description

இதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், விதவைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவித்து குறித்த பெண்ணுக்கும் கடை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கடையை விட்டுச் செல்லுமாறு நபரொருவர் அச்சுறுத்தல் விடுப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த வருடம் திருவிழா காலத்தில் கடைகள் வழங்கப்படும் போது நீ எவ்வாறு கடை பெறுகிறாய் என்று பார்ப்போம் என அந்த நபர் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அந்த பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வாறு துன்பங்கள் கொடுக்கப்படுவதால் அவர்கள் மனவுளைச்சளை எதிர்நோக்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இவ்வாறான முயற்சியாளர்களுக்கு யாழ். மாநகரசபையினால் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள போதும் இவ்வாறான மோசமான செயல்களால் அவர்கள் தொழிலை நடத்த பின்னடித்து வருகின்றதாகவும் குறிப்பிடுகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி