அரசிற்கு எதிராக அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி!!

கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியின் அங்கத்தவருமான சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கட்சியை சேர்ந்த அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலம் இருக்கும் இடத்தில் இருக்கின்றனர்.

கட்சியின் கொள்கையை காக்கும் வகையில் செயற்பட்டு, எதிர்க்கட்சியின் கடமையை நிறைவேற்றி வருவதாகவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி