நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பினை விடுக்க வேண்டும்!!

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக பகிரங்கமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினரான முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவத்தின் 33 படையணிகள் மூடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அமைச்சரவையின் பிரதான என்ற வகையில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி அமைதியாக இருக்க முடியாது.

மேலும் வழக்கு தாக்கல் செய்யாது இராணுவ அதிகாரிகளை கைதுசெய்தமை மற்றும் விளக்கமறியலில் வைத்திருப்பது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை அழைத்து ஜனாதிபதி கடுமையாக விமர்சித்ததை அனுமதிக்க முடியாது. குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கும் தேவையே இதன் மூலம் புலப்பட்டுள்ளது.

வழக்கு ஒன்றை தொடரும் முன்னர், சாட்சியங்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பது, சாட்சியாளர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை தடுக்க வேண்டியது அத்தியவசியமானது என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார்.

அரசியல் தேவைகளுக்காக கொலை சதித்திட்டங்களை அரங்கேற்றுவது மட்டுமல்லாது அவற்றின் விசாரணைகளை மூடிமறைப்பது என்பவற்றில் சிறப்பான வரலாறு இலங்கைக்கு இருக்கின்றது.

சட்டத்திற்கு அமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் சம்பந்தப்பட்ட நபர்கள் வகிக்கும் பதவிகள், அவர்கள் வரலாற்றில் செய்த நன்மைகள் உட்பட எவையும் கவனத்தில் கொள்ளப்படக் கூடாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி