வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் அடுத்த கூட்டம்!

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் அடுத்த கூட்டம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளது.

அனைத்து அமைச்சர்கள், வடக்கு - கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற செயலணியின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

எனினும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி