அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அடையாள உண்ணாவிரத போராட்டம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்கக்கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களும் அழுத்தங்களும் கடுமையாக பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று நேரடியாக சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்ட நீங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் மன்னர் மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மன்னார் நகரசபை தலைவர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி