முகமூடி அணிந்த மர்ம நபர்களால் பொலிஸார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்!!

பிரித்தானிய சாலையில் முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள், போக்குவரத்து பொலிஸார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்மிங்காம் அருகே Alum Rock பகுதியில் சென்று கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் ஒருவரை, முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

திடீரென அங்கு வந்த நபர்கள், இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த பொலிசாரை கீழே தள்ளிவிட்டு தங்களுடைய கால்களால் மிதித்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இதில் வலி தாங்க முடியாத அந்த பொலிஸார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என சத்தமிடுகின்றார். இதற்கிடையில் அவருடைய இருசக்கர வாகனத்தை இரண்டு பேர் எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

அங்கிருந்த பொதுமக்கள் யாருமே இந்த சம்பவத்தில் தலையிட்டு தடுக்க முயற்சிக்கவில்லை. ஆனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் இதனை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி