பொதுமக்களை துன்புறுத்தியாவது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் மகிந்த!

பொதுமக்களை துன்புறுத்தியாவது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என ராஜபக்ச சகோதரர்கள் முயற்சி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அதிகார போதையில் இருந்து இன்னும் ராஜபக்ச சகோதரர்கள் மீளவில்லை. அதனால் தான் மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள நாட்டில் குழப்பங்களை விளைவித்து வருகிறார்கள்.

அடுத்த பௌர்ணமிக்குள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஐந்தாம் திகதி கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

மூன்று வருடங்களாக பல பௌர்ணமிகள் கடந்து விட்டன. மக்களுக்கு தீங்கு விளைவித்ததை தவிர இவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.

மூன்று வருடங்களாக இவர்கள் செய்ததை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு வேலைநிறுத்தம் செய்தார்கள்.

எந்தவித முன்னறிவித்தலுமின்றி ரயில்வே ஊழியர்கள் செய்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களே பாதிக்கப்பட்டார்கள்.

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி பொதுமக்கள் அனைவரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

இவ்வாறு ஆட்சியை கவிழ்பதாக கூறி இவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள், சதித்திட்டங்கள் அனைத்திலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே.

நாம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை இவர்கள் துஸ்பிரயோகப்படுத்தி போராட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்தும் இன்னல்களை கொடுத்தால் அரசாங்கமும் ஒருமுறை வழங்கப்பட்ட ஜனநாயகத்தை பொதுமக்கள் நலன்கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி