பால் மாவில் கலப்படமாக பன்றி எண்ணெய்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி எண்ணெய் கலந்திருப்பதாக கிராமிய பொருளாதார, மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி எண்ணெய், மாட்டு கொழுப்பு, மரக்கறி எண்ணெய் போன்றன உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளை மக்கள் நுகராது உள்நாட்டு பால் மா மாற்றும் பாலை உட்கொள்ள பழகிக் கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் நாட்டை பாலில் தன்னிறைவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி