பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் தாதியர்கள்!!

மேலதிக நேர கொடுப்பனவு நிலுவை இது வரை வழங்கப்படவில்லை என தெரிவித்து தாதியர்கள் நிறைவுகாண் துணை வைத்திய சேவையினருடன் இணைந்து இன்று ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

02-98/2017ம் இலக்க சுற்று நிரூபத்தின் பிரகாரம் 07.01.2016 முதல் 31.12.2016 வரையான காலப்பகுதிக்கான மேலதிக நேர கொடுப்பனவு நிலுவை வழங்கப்படவில்லை என தெரிவித்தே குறித்த பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்றது.

வடமாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெறும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.

இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி