கட்சி பேதங்கள் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலாநிதி ஹர்ச டி சில்வா

எந்த அரசாங்கமாக இருந்தாலும் அந்த அரசாங்கம் செய்யும் நன்மையான விடயத்தை வரவேற்று அதனை செயற்படுத்த கட்சி பேதங்கள் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை விரிவுப்படுத்தும் வகையில் அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்கும் போது பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.

எனினும் இந்த சேவை மூலம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி