யாழில் ஆரம்ப பிள்ளைப்பருவ விருத்தி செயலமர்வு!!

'மூளை விருத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்பும்' எனும் தொனிப்பொருளில் வடமாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் பிள்ளைப்பருவ துறைசார்ந்த உத்தியோகத்தர்களுக்கான ஆரம்ப பிள்ளைப்பருவ விருத்தி செயலமர்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு வடமாகாண சபை மற்றும் யுனிசெப் நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் இன்று வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த செயலமர்வானது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதம திகாரி பவூலா புலென்சியா ஆகியயோரால் இனிதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பிள்ளைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. வன்முறைகள், துஸ்பிரயோகம் மற்றும் கைவிடுதல் போன்றவற்றிற்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு பல நாடுகளில் பல செயற்திட்டங்களை யுனிசெப் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒருபகுதியாக இந்த செயலமர்வு இலங்கையில் வடமாகாணத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வில், இலங்கை மற்றும் உலக நாடுகளில் பல கோடி குழந்தைகளிற்கு உச்ச மூளை விருத்திக்கான பல்வேறு தூண்டல்கள் கிடைக்கப்படுவதில்லை.

அதனால், போசாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைக்கப்படுவதிலை என்று யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்போது, எதிர்காலத்தில் ஆரம்ப பிள்ளை விருத்தி தேசிய ரீதியில் முதன்மையானதாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் அரசாங்கங்கள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் ஊடாக ஆரம்ப பிள்ளை விருத்தி இலக்குகளை அடைய முயற்சிப்பதாக உறுதியளித்ததன் பிரகாரம், பிள்ளைப் பருவ விருத்திச் செயற்பாடுகளை தமது பொருளாதார மற்றும் அரசியல் திட்டங்களில் முதன்மையாக வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

இதன்பொருட்டு ஆறு அம்ச செயற்திட்டங்களின் மூலம் இதனை நிறைவேற்ற அரசாங்கத்தினையும், அதன் பங்காளிகளையும் யுனிசெப் அழைத்துள்ளது.

இந்த செயலமர்வில், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும், வடமாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள பணிப்பாளர்கள், செயலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி