‘சபரிமலையில் ஆன்லைன் பதிவுமுறை சாத்தியமற்றது’ - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தகவல் !

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் சபரிமலையில் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆன்லைன் பதிவுமுறையை பின்பற்றலாம் என போலீசார் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஆன்லைன் நடைமுறை சபரிமலையில் சாத்தியமில்லாதது என கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூறியுள்ளது. இது குறித்து தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், ‘திருப்பதி கோவிலில் பின்பற்றப்படுவது போல சபரிமலையிலும் தரிசனத்துக்கு ஆன்லைன் பதிவுமுறை பின்பற்றலாம் என ஒரு பரிந்துரை இருக்கிறது. ஆனால் சபரிமலையின் தனித்தன்மை மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக இந்த ஆன்லைன் பதிவுமுறை இங்கு நடைமுறையில் சாத்தியமற்றது’ என்று தெரிவித்தார்.

கடந்த மகரவிளக்கு காலத்தில் நாளொன்றுக்கு 4 லட்சம் பக்தர்கள் வரை வந்து சென்றிருக்கும் நிலையில், இதை வெறும் 20 ஆயிரம் அல்லது 30 ஆயிரமாக எப்படி குறைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய பத்மகுமார், இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் தேவசம்போர்டே எடுக்கும் எனவும், கோவில் நலனில் பிறர் தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறினார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி