யாழில் வெளியான தமிழ்த்தாய் வாழ்த்து!!

பாட்டுக்கொரு கவிஞர் பாரதியாரின் நினைவு நாளையொட்டி தமிழ்த்தாய் வாழ்த்துக் காணொளியொன்று ஐ.பி.சி தமிழ் தாயக கலையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த செந்தி செல்லையாவின் நடிப்பில் அமைந்த பாடலாக இது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் பாரதியார் வேடத்தில் செந்தி நடித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை நான்கு மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த பலரும் கலந்துகொண்டனர். குறித்த காணொளியை செந்தி செல்லையா வெளியீடு செய்துவைக்க ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் முதல்வர் கந்தையா பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.

விழா மேடையில் வைத்து ஐ.பி.சி தமிழின் முதல்வர் கந்தையா பாஸ்கரனுக்கு கொடைப் பேரரசன் என்ற பட்டம் தமிழன் வழிகாட்டி குழுமம் சார்பாக வழங்கப்பட்டது. இதில் செந்தி கருத்துக் கூறும்போது, “பாரதியார் தமிழுக்காகவே வாழ்ந்தார். தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் சொல்லற்கரியவை. தமிழை வளர்ப்பதற்காக கவிதை எனும் தொழிலைத் தேர்ந்தெடுத்தார். அந்த வகையில் பாரதியார் போலவே ஐ.பி.சி தமிழ் முதல்வரும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ்ச் சமூகத்தின் நிமிர்வுக்காகவும் அயராது உழைக்கின்றார்.” என்றார்.

பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்தினை புதுமையான முறையில் மெட்டமைத்து முற்றிலும் தாயகக் கலைஞர்களைக் கொண்டு இந்த பாடல் ஒளிப்பேழை யாக்கப்பட்டுள்ளது.

இதில் படமாக்கப்பட்ட பிரதேசங்கள் அனைத்தும் இலங்கையின் முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களாக விளங்குகின்றன.

குறித்த பாடலின் முழுமையான வடிவத்தை கீழுள்ள காணொளி இணைப்பில் காணலாம்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி