சீனர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் கொழும்பு நகரம்!!

கொழும்பு நகரம் சீனர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் கொழும்பில் பல இடங்களில் சீனர்கள் அதிகளவில் நடமாடி திரிவதை காணக் கூடியதாக இருப்பதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனா, இலங்கையில் பல்வேறு இடங்களில் பல நிர்மாணிப்பு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.

இவற்றில் கொழும்பு நகரம் பிரதான இடத்தை பிடித்துள்ளது. இதனால் கொழும்பு நகரில் சீனப் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனர்கள் பல இடங்களில் உணவகங்கள் உட்பட கடைகளை நடத்தி வருவதை கொழும்பில் காணக்கூடியதாக இருக்கின்றது.

கொழும்பு நகரில் சீனர்களின் எண்ணிக்கை ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கொழும்பை சீனா ஆக்கிரமித்துள்ள விதம் பற்றியும் குறித்த ஊடகம் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி