குழந்தைகளை கொலை செய்த மனைவி! கணவன் தப்பித்தது எப்படி? காதலனின் பகீர் வாக்குமூலம்

சென்னை குன்றத்தூரை அடுத் மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் விஜயன் (30)-அபிராமி (25) தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் உள்ளனர்.தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வரும் விஜயன், மாத கடைசில் என்பதால் நேற்று வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இன்று காலை வீடு திரும்பிய அவர், வீடு வெளிப்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருப்பதை பார்த்து சந்தேகித்துள்ளார்.

பின்னர் வீட்டின் கதவை திறந்து கொண்டே உள்ளே பார்த்த போது, தன்னுடைய இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் வீட்டில் மனைவி மாயமாகியிருப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இரு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், விஜயனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அபிராமிக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு இருந்து வந்ததால், கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிவித்தார்.இதனால் கள்ளக்காதலனுடன் தப்பி சென்ற அபிராமியை பிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கள்ளக்காதலனான சுந்தரத்தை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவன், கணவரை கொல்வதற்கு தானும் அபிராமியும் விஷம் வாங்கினோம்.

எப்போதும் கணவர் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்ததும் டி குடிப்பது வழக்கம், அதேபோல இரவு நேரத்தில் டீ குடிப்பார் என்பதால் கணவருக்காக பிளாஸ்கில் வைத்திருந்த டீயில் விஷத்தை கலந்து வைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக கணவருக்கு போன் செய்த அபிராமி நீங்கள் எப்போது வீட்டிற்கு வருவீர்கள் எனக் கேட்டுள்ளார். மாதம் கடைசி என்பதால் வேலை அதிகமாக உள்ளது என்பதால் வர நேரமாகும் என கூறினார்.

இதனையடுத்து அவர் வீட்டுக்கு வரவில்லை , இதனால் முதலில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அதன் பின் சுந்தரத்துடன் தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி