சர்காரின் சிம்ட்டங்காரன் பாடலை பாடிய பாடகி, தளபதியை பற்றி என்ன சொல்லியிருக்கிறார், பாருங்க!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். இப்படம் சன்பிக்சர்ஸின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் வருகிற அக்.2ல் வெளியாகவுள்ளன.

ஆனால் ஒரே ஒரு சிங்கிள் டிராக் மட்டும் நேற்று மாலை வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு ஆளப்போறான் தமிழன் புகழ் விவேக் தனது கற்பனை வரிகளை தந்துள்ளார்.

இந்த பாடலில் மட்டும் மூன்று விதமான பின்னணி குரல்கள் உள்ளன. அதில் ஒரு குரல் பாடகி அபர்ணாவின் குரல். சொல்லபோனால் இவரது பகுதி வரிகள் தான் மக்களின் மனதில் நன்றாக பதிந்துள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், தளபதிக்காக நான் இந்த பாடலை பாடியது பெருமையானது, ஏன் என்றால் நானும் பயங்கரமான தளபதி ஃபேன் என கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி