ஊடகங்களால் அரசாங்கத்தை இம்மியளவும் அசைக்க முடியாது!

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டு சில ஊடகங்கள் துள்ளினாலும் அரசாங்கத்தை இம்மியளவும் அசைக்க முடியாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தில் கொள்ளையிட்ட பணத்தை கொண்டு அப்பாவி மக்களுக்கு, சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து கொழும்புக்கு அழைத்து வந்தாலும் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் மாத்திரம் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நேரிடும்.

அத்துடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று 2025ம் ஆண்டு வரை தற்போதைய அரசாங்கம் இதே விதமாக முன்னோக்கிச் செல்லும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி