அனைத்து சாப்பாட்டுக் கடை உரிமையாளர்களுக்கும் முக்கிய செய்தி

அனைத்து உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளும் ஸ்ரீலங்கா தரநிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்படும் தரச்சான்றுதலான ஜீஎம்பி சான்றிததழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு தரமானதும் பாதுகாப்பானதுமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த சட்டம் அடுத்த வருட ஆரம்பம் முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரச்சான்றை இணையத்தின் ஊடாகவோ, அல்லது தமது அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களை பதிவுசெய்து பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா தரநிர்ணய நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

வியாபாரிகள் உணவு தயாரிப்பாளர்கள், குடிபான தயாரிப்பாளர்கள், அல்லது அது சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றவர்கள் குறித்த தரச் சான்றிதழை பெறாமல் செயற்பட முடியாதென நுகர்வோர் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி