பெண் பொலிஸார் தன்னுடைய வீடு என நினைத்து பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து இளைஞரை சுட்டுக்கொன்ற சம்பவம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் பொலிஸார் தன்னுடைய வீடு என நினைத்து பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து இளைஞரை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த Amber Guyger (30) என்ற பெண் பொலிஸ் கடந்த வியாழக்கிழமையன்று பணி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அங்கு சாவியை வைத்து திறக்கும்போது வீடு திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த Amber, தன்னுடைய கைத்துப்பாக்கியை கொண்ட உள்ளே நுழைந்து, அங்கிருந்த 26 வயது இளைஞர் Botham Jean-ஐ துப்பாக்கியால் சுட்டார். இதில் Botham சுயநினைவிழந்து மயங்கி விழுந்தார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து தான் வீடு மாறி வந்திருப்பதை உணர்ந்த Amber உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார், Botham-ஐ மீட்டு முதலுதவி சிகிசிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலே Botham சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தன்னுடைய கவனக்குறைவால் நடந்த தவறுக்கு Botham குடும்பத்தாரிடம் Amber மன்னிப்பு கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள Botham அம்மா Allie Jean, உங்கள் திறவுகோல் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் தவறான வீட்டில்தான் இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும், ஒவ்வொரு அபார்ட்மெண்ட் வீட்டிலும் இருக்கும் எண்ணை எண்ணிப் பார்க்க வேண்டும்.நான் அந்த பெண் பொலிஸாரை மன்னிக்க விரும்புகிறேன். ஆனால் அவள் என் இதயத்தைக் எடுத்துவிட்டாள். அவள் என் ஆன்மா உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள் என தெரிவித்துள்ளார்.

Dallas பொலிஸ் நிலையத்திற்காக பல்வேறு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ள Amber-ஐ விரைவில் கைது செய்ய உள்ளதாக Dallas காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதன் பின்னர் இந்த வழக்கு Texas Rangers-க்கு மாற்றப்பட்டது. தற்போது இதுகுறித்து அவர்கள் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி