புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் புலிகளின் தங்கம் தேடிய ஏழு பேரின் நிலை !

விடுதலைப்புலிகளின் தங்கம் தேடி சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைதுபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் தங்கம் இருப்பதாக தெரிவித்து அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இறுதி யுத்தகாலத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இந்நிலையில் , குறித்த வீட்டின் பின்புறமாக அமைந்துள்ள காட்டில் மறைந்திருந்து இவர்களின் நடவடிக்கைகளை அவதானித்த காவற்துறையினர் இன்றைய தினம் 7 பேரை கைது செய்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் புதைத்த நகைகள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே தாம் இந்த அகழ்வினை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் மாத்தறை, சிலாபம், மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி