மர்மங்கள் பொதிந்துள்ள மன்னார் புதைகுழி!!

மன்னார் சதொச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன.

மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

இன்று 62வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை பேராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் இதுவரை குறித்த வளாகத்தில் 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மேலதிகமாக காணப்படும் 14 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இடம் பொறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.இதுவரை 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு 97 மனித எச்சங்கள் மீட்கப்பட்டலும் குறித்த வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் குறைவாகவே காணப்படுகின்றது.

இது வரை வட்ட வடிவிலான உலோகப்பொருட்கள் மாலை போன்ற ஒரு சில தடய பொருட்களே மீட்கப்பட்டுள்ளன.

இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும், துணிகள் அல்லது ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த விதமான தடய பொருட்களும் கிடைக்கவில்லை.சடலங்களாக புதைக்கப்பட்ட போது ஆடையில் காணப்படும் தடயப்பொருட்கள் எவையும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் புதைக்கப்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாமோ என சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி