கணவரை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய மனைவி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கணவரை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

காட்டுப்பகுதியில் உள்ள பாழுங்கிணற்றிலிருந்து ராம்பாரோஸ் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை இது தொடர்பாக ராம்பாரோஸின் மனைவி பியுலெந்தா பாய் (32), இவருடன் முறைதவறிய உறவில் இருந்த சந்திரா பிரகாஷ் சவுத்ரி (35) ஆகியோரை கைது செய்தனர்.

இருவருக்கும் ஓராண்டு காலமாக முறைதவறிய தொடர்பு இருந்து வந்தது. இவர்களது இந்த உறவு தெரியவர கணவர் கண்டித்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.

இதனையடுத்து ராம்பாரோஸை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளனர். ஆகஸ்ட் 31ம் தேதி கணவனின் உணவில் மனைவி விஷம் கலந்து கொடுத்துள்ளார். சாப்பிட்டவுடன் கணவர் மயங்கிச் சரிந்துள்ளார்.

இதன் பிறகு சந்திரபிரகாஷ் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்து விட்டு ராம்பாரோஸின் வீட்டிலேயே இருவரும் பிணத்தை மறைத்து வைத்துள்ளனர். பிறகு இரவு நேரத்தில் அவரது உடலை சாக்குப்பையில் அடைத்து ராம்பாரோஸின் மோட்டார் பைக்கிலேயே அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடைசியாக பாழுங்கிணற்றில் சாக்குப்பையில் உடலுடன் வீசி எறிந்து விட்டு வந்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி