மரண தண்டனை குறித்து மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி!!

மரண தண்டனை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது பொதுச்சொத்து மற்றும் அரச நிதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்து நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்று பொதுச்சொத்து மற்றும் அரச நிதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டு எதிர்க்கட்சியினால் இன்று நாடளாவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி