புலிகளை தோற்கடிக்க இலங்கைக்கு, இந்தியா உதவியதாக மகிந்த ராஜபக்ச கருத்து!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் புலிகளை தோற்கடிக்க இலங்கைக்கு, இந்தியா உதவியதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, “மகிந்த ராஜபக்ச உண்மையை தான் பேசுகிறார் என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர்,

'மகிந்த ராஜபக்ச கூறுவது உண்மையாக இருந்திருக்குமாயின் இந்திய அரசின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருந்திருக்கின்றது என்பதே அதற்கு பொருள்" எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த திமுக, இலங்கை படுகொலைக்கு காரணம் என பாரதீய ஜனதா கட்சியினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்துள்ள கி. வீரமணி, “அது வெளியில் வந்து விட்டார்கள் என்ற வரலாற்றை மறந்து விட்டு பேசுகிறவர்களின் பேச்சு” என பதிலளித்துள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி