இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கவுள்ள அரசு!!

இராணுவ தளபதி கோரியுள்ள மேலதிக அதிகாரத்தை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் சட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானங்களை எடுக்கவும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். அதற்கு தேவையான கூடிய அதிகாரங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், தற்போதைய பொருளாதார நிலைமை குறுகிய காலத்திற்கு ஏற்பட்டது எனவும் அதில் அனைத்து உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி