பேஸ்புக் கடவுச்சொல்லை கொடுக்க மறுத்த பிரித்தானிய இளைஞர்: நீதிமன்றம் அளித்த தண்டனை

பிரித்தானியாவில் பொலிஸ் விசாரணையின்போது தனது பேஸ்புக் கடவுச்சொல்லை கொடுக்க மறுத்த இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் நிக்கல்சன். இவரது குடும்ப பெண் தோழியான 13 வயது லூசி மக்ஹூக் கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, ஸ்டீபன் நிக்கல்சன் கைது செய்யப்பட்டார். அதற்கு காரணம், லூசி கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு நிக்கல்சன் அவரது வீட்டில் இருந்ததாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நிக்கல்சனிடம் விசாரணை நடத்த பொலிசார் திட்டமிட்டனர். நிக்கல்சன் லூசிக்கு ஏதேனும் தனிப்பட்ட முறையில் குறுந்தகவல் அனுப்பினாரா? அவர்களுக்குள் ஏதேனும் உறவு இருந்திருக்குமா? என்பதை அறிய பொலிசார் நிக்கல்சனின் பேஸ்புக் Chatting-ஐ ஆராய திட்டமிட்டனர்.

அதற்காக நிக்கல்சனிடம் அவரது பேஸ்புக் கடவுச்சொல்லை பொலிசார் கேட்டுள்ளனர். ஆனால் நிக்கல்சன் கடவுச்சொல்லை தர மறுத்துள்ளார். தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கும் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆர்.ஐ.பி.ஏ சட்டத்தின்படி விசாரணைக்காக கைப்பேசி, கணினி உள்ளிட்டவற்றின் கடவுச்சொல்லை பொலிசார் கேட்டால் கொடுக்க வேண்டும் என்பது விதி. இல்லையென்றால் மறுத்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

எனவே, நிக்கல்சனுக்கு 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி